அமெரிக்காவுடன் மோதலா? இல்லை என்கிறார் இஸ்ரேல் பிரதமர்

2

ஜெருசலேம்: அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வான டிரம்ப், முதல் வெளிநாட்டுப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றார். இந்தப் பயணத்தின் போது பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.


இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், டிரம்ப்பின் இந்தப் பயணத்தின் போது, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு மட்டும் செல்லவில்லை.


இதனால், அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் ஏற்பட்டதே, டிரம்ப் அந்நாட்டுக்கு செல்லாததற்கு காரணம் என்று செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் போக்கு உள்ளதாக வெளியான தகவலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது: 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசினேன். அப்போது, உங்களுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் என்னுடைய முழு ஆதரவு உள்ளது என்று கூறினார். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement