பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

நியூயார்க்: பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்திய தூதர் அனுபமா சிங், "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது," என்று குற்றம் சாட்டி உள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டன. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்திய தூதர் அனுபமா சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்
-
மே 24,25,26 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
-
தமிழகத்தில் பறவைகள் பல விதம்; கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!
-
தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; நயினார் நாகேந்திரன் விருப்பம்
-
நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கைது
-
தி.மு.க., அரசின் தோல்வியால் ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதா? அன்புமணி காட்டம்
-
உளவாளி யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் போலீஸ் காவல் நீட்டிப்பு