சிவகங்கை கிரஷர் குவாரி விபத்து; பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே உள்ள கிரஷர் குவாரியில் ஏற்பட்ட பாறை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் குவாரியில் 400 அடி பள்ளத்தில் வெடிவைப்பதற்காக மே 21ம் தேதி துளையிட்ட போது பாறைகள் சரிந்து 5 தொழிலாளர்கள் பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் மைக்கேல், 47, என்ற தொழிலாளி படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (மே 22)அதிகாலை 4:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் உயிரிழந்தார்.

இதனால், குவாரியில் ஏற்பட்ட பாறை விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement