டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!

3


புதுடில்லி: டில்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மாரச் மாதம் வரை டில்லி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது செய்தனர்.



இவர்கள் மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர். இவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நேபாள வம்சாவளியைச் சேர்ந்த அன்சாருல் மியான் அன்சாரி.


இவர்களிடம் இருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. டில்லி போலீசார் மே மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இரண்டு பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement