மே 24,25,26 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: கோவை, நீலகிரியில் மே 24,25,26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாட்களில் மேலும் வலுவடையக் கூடும்.


கோவை, நீலகிரியில் மே 24,25,26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement