மிட்சல் மார்ஷ் 'மின்னல்' சதம்: லக்னோ அணியிடம் வீழ்ந்தது குஜராத்

ஆமதாபாத்: பிரிமியர் லீக் போட்டியில் லக்னோ அணி 33 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது. மிட்சல் மார்ஷ் 56 பந்தில் சதம் விளாசினார்.
ஆமதாபாத்தில் (குஜராத்) உள்ள மோடி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் குஜராத், லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
மார்ஷ் விளாசல்: லக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது சாய் கிஷோர் 'சுழலில்' மார்க்ரம் (36) சிக்கினார். ரஷித் கான் வீசிய 12வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய மார்ஷ், 56 பந்தில் சதத்தை எட்டினார். மறுமுனையில் அசத்திய நிக்கோலஸ் பூரன், 23 பந்தில் அரைசதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்த போது அர்ஷத் கான் பந்தில் மார்ஷ் (117) அவுட்டானார்.
லக்னோ அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 235 ரன் எடுத்தது. பூரன் (56), கேப்டன் ரிஷாப் பன்ட் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஷாருக்கான் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் (21), கேப்டன் சுப்மன் கில் (35) ஆறுதல் துவக்கம் தந்தனர். பட்லர் (33), ரூதர்போர்டு (38) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ஷாருக்கான், 22 பந்தில் அரைசதம் எட்டினார். ராகுல் டிவாட்யா (2), அர்ஷத் கான் (1) ஏமாற்றினர். ஷாருக்கான் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் படோனி 'சுழலில்' ரபாடா (2), சாய் கிஷோர் (1) சிக்கினர்.குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 202 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் கான் (4) அவுட்டாகாமல் இருந்தார்.
பிரிமியர் லீக் அரங்கில் அதிவேக சதம் விளாசிய லக்னோ அணி வீரர்கள் வரிசையில் முதலிடத்தை ராகுல், ஸ்டாய்னிசுடன் பகிர்ந்து கொண்டார் மார்ஷ். மூவரும் தலா 56 பந்தில் சதத்தை எட்டினர்.
மேலும்
-
கோவை, நீலகிரிக்கு 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்தது சென்னை வானிலை மையம்!
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்
-
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!