தடுப்புச்சுவர் சிதைந்த பாலத்தால் விபத்து அபாயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவிலில் பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து காணப்படுவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனை தவிர்க்க பாலத்தை சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து வலையபட்டி செல்லும் விலக்கு ரோட்டில் ஒரு பாலம் உள்ளது. இதன் தடுப்பு சுவர் போதிய உயரமின்றியும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களும், கிராமங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளும், மெயின் ரோட்டில் திரும்பும் போது விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

எனவே, பாலத்தின் தடுப்பு சுவரை உயர்த்தி கட்டி சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement