பணியில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் இ.எஸ்.ஐ., சார்பில் மாத உதவித்தொகை

சேலம், மே 23
இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர், தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக இறக்கும்பட்சத்தில், அவரது ஊதியத்தில், 90 சதவீதம், குடும்ப உறுப்பினர்களுக்கு, இ.எஸ்.ஐ., கழகத்தால் உதவித்தொகையாக மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
இந்த அடிப்படையில், 'ஈஸ்ட் வெஸ்ட் பார்மா' நிறுவனத்தில் வேலை செய்து வந்த, இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர் பாபு கோவிந்தன், 2024 ஆக., 3ல் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு, மாத உதவித்தொகையாக, 15,720 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, சேலம் கிளை மேலாளர் ஜெனோவா, குடும்ப உறுப்பினர்களிடம், ஆணையை வழங்கினார். ஈஸ்ட் வெஸ்ட் பார்மா ஹெச்.ஆர்., சுரேஷ் உடனிருந்தார்.

Advertisement