பாக்.,கில் ராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள்: ஜெய்சங்கர்

1


பெர்லின்: ஜனநாயக நிலையற்றதன்மை மற்றும் எல்லை தாண்டிய அத்துமீறல் என வரலாறு கொண்ட பாகிஸ்தானில் நிலவிய ராணுவ ஆட்சியாளர்களை ஐரோப்பிய நாடுகள் ஆதரித்தன, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


டென்மார்க் மற்றும் நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். பிராந்திய ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சர்வதேச பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


இதனைத்தொடர்ந்து,ஜெர்மன் நாளிதழுக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 1947 முதல், காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த எட்டு தசாப்தங்களாக நாம் என்ன பார்த்து கொண்டுள்ளோம். பெரிய ஜனநாயகமான ஐரோப்பா, இந்த பிராந்தியத்தில் ராணுவ சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக துணை நின்றுள்ளது. பாகிஸ்தானில் பல வழிகளிலும் ஜனநாயகத்தை அழித்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்களை ஐரோப்பாவை போல் வேறு யாரும் ஆதரித்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement