ரூ.35 கோடி மதிப்பிலான பணி அமைச்சரால் துவக்கிவைப்பு

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி வார்டு, 56க்கு உட்பட்ட பாண்டியன் நகர் - திருப்பதி கார்டன், பிரதான சாலை, குறுக்கு சாலை, இரணியன் வீதி என பல்வேறு பகுதிகளில், 4.06 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார்.

வார்டு எண்- 5ல் ஆயப்பாளியில், 1.58 கோடி ரூபாயில் தார்ச்சாலை பணி, எஸ்.எஸ்.பி.நகரில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டடம் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு எண்- 5 மொக்கையம்பாளையத்தில், 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்வுகளில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement