கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்

4

பெங்களூரு: கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த ஏழு பேர், கார்கள், பைக்குகளில் பேரணியாக சென்றதுடன், சத்தமாக பாடல்களை ஒளிபரப்பு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர், அம்மாநில போக்குவரத்து துறையில் பணியாற்றும் 40 வயதான டிரைவர் ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும், அங்கு இருந்த ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருந்தனர்.


அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, அந்த பெண்ணை தாக்கியதுடன் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.இது தொடர்பாக அப்தாப் சந்தனகடி, மதர் சாப் மண்டகி, சமிவுல்லா லாலாநவர், முகமது சாதிக் அகசிமானி, சோயிப் முல்லா, தவுசிப் சோட்டி மற்றும் ரியாஸ் சவிகேரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு பல மாதங்களாக நீதிமன்ற காவலில் உள்ளனர். நீதிமன்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண், கைதானவர்களை அடையாளம் காட்ட தவறியதாக தெரிகிறது. இதனால், வழக்கு பலவீனமானது.


இந்நிலையில், இந்த ஏழு பேருக்கும் ஹவேரி செசன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனையடுத்து வெளியில் வந்த அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அகி அலுர் நகரப்பகுதியில்மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களில் பேரணியாக சென்றனர். அப்போது பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டனர். அப்போது அவர்கள் புன்னகைத்தபடி, வெற்றிச் சின்னத்தை காட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Advertisement