காஞ்சி நீச்சல் பயிற்சியில் சேர வரும் 27ம் தேதி கடைசி நாள்

காஞ்சிபுரம்:காஞ்சியில் அடுத்தகட்ட கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் 2மோ் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம், ஏப்., 1ம் துவங்கியது. இதுவரை மூன்று கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடந்துள்ளது.

தற்போது நான்காம் கட்ட பயிற்சி முகாம், 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நிறைவாக, ஐந்தாவது கட்டமாக வரும் 27ம் தேதி துவங்கி, ஜூன் 8ம் தேதி வரை நடக்கிறது.

தினமும், காலை 6:00 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரையிலும் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதில், திங்கட்கிழமை விடுமுறை. தங்களுக்கு உகந்த ஒரு மணி நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய்.

மேலும், விபரங்களுக்கு 77085 43350, 74017 03481 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement