செங்குன்றத்தில் பணிகள் மந்தம் அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'

செங்குன்றம்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், நேற்று திடீரென செங்குன்றம் வந்தார். நாரவாரிகுப்பம் பேரூராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம், குப்பை தரம் பிரிப்பு திட்டம் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.
செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம், 2.50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. புதிய கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.புழல் ஏரிக்கரை எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் மந்த கதியில் நடப்பதாக, அதிகாரிகளை அழைத்து கலெக்டர் பிரதாப் கண்டித்தார்.
அப்போது, 'பணிகள் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அதிகாரிகள் வேலை செய்வதாக தெரியவில்லை. நான்கு மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் எளிதாக வந்து செல்லும் வகையில் வழி இருக்க வேண்டும்' என அதிகாரிகளை கண்டித்தார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேடங்கிநல்லுாரில் புதிய பேருந்து நிலையம் 31.57 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு, பணியின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் கீழ் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் 35 பேர் தங்கும் இடத்தை பார்வையிட்டார்.
பின், ஜெயா நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.62 கி.மீ நீளத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணியை ஆய்வு செய்தார்.
நீங்களா சேர்மன்?
அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடக்கும் கட்டட பணி குறித்து ஆய்வு செய்த கலெக்டர் பிரதாப், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசியை அழைத்தபோது, அவருக்கு பதில் அவரது கணவர், கலெக்டரிடம் சென்றார்.
''நீங்களா சேர்மன்; நான் சேர்மனைத் தானே அழைத்தேன். உங்களை அழைக்கவில்லையே,'' என்றார் கலெக்டர். பின் தமிழரசியிடம், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
இன்றைய மின்தடை
-
தடுப்பணைகளே கட்டாமல் நிதி முறைகேடு; குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
-
கால்வாய் கரையில் கனரக வாகனங்கள்: விவசாயிகள் அதிருப்தி