டீக்கடையில் மதுபானம்: பொதுமக்கள் மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை புதுாரில் உள்ள டீக்கடையில் மதுபானம் விற்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.

திண்டுக்கல் அருகே சிறுமலை புதுாரில் டீக்கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில் அப்பகுதி செல்வ முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் நேற்று இரவு சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். டீக்கடையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்கப்படுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறி அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட டீக்கடைக்கு சென்று கேள்வி எழுப்பினர். அப்போது பொதுமக்கள் கடைக்குள் பதுக்கி வைத்திருந்த மதுபான பெட்டிகளை எடுத்து வந்து சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார், வனத்துறையினர் ஆதரவோடு மதுபானம் பதுக்கி விற்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement