பராமரிப்பில்லாத அரசு பள்ளி

சோழவந்தான்: சோழவந்தான் அரசஞ்சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போதிய பராமரிப்பின்றி காடாக காட்சியளிக்கிறது.

பழமையான இப்பள்ளி சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டதால் பள்ளி மைதானத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இதை பாதையாகவும், கால்நடைகளை கட்டவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் மைதானம், வளாகத்தில் புதர் செடிகள் முளைத்து காடு போல் உள்ளது.

காசி: முன்பு இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். தற்போது 200க்கும் குறைவானோர் உள்ளனர். பாதுகாப்பில்லாததால் இரவில் மது அருந்தவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பள்ளியை மீட்க வேண்டும் என்றார்.

Advertisement