பழிவாங்குவதை பா.ஜ., நிறுத்த வேண்டும்

திருச்சி ராணுவ திடலில், நாளை மறுநாள் 25ல், 'தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்' என்ற தலைப்பிலும், 'சிந்துார் ஆப்பரேஷன்' போரில் வெற்றி கண்ட ராணுவ வீரர்களுக்கு, 'ஜெய்ஹிந்த் சல்யூட்' என்ற தலைப்பில் மாநாடு நடத்தி பாராட்டு தெரிவிக்க உள்ளோம்.

'டாஸ்மாக்' விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு தனிநபர் தவறு செய்தால், அந்த துறை மீதோ, அரசு மீதோ எப்படி குற்றம்சாட்ட முடியும்? ஏற்கனவே, டாஸ்மாக்கில் தவறு செய்த, 41 நபர்கள் மீது விசாரணை இருக்கிறது. அமலாக்கத் துறையை வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கையை, பா.ஜ., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- செல்வப்பெருந்தகை,

தலைவர், தமிழக காங்.,

Advertisement