முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!

கோவை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை கமிஷனரிடம் அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்று கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அந்த கடிதத்தில், ''வரும் ஜூலை மாதம் 30ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. அதில் நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கோவை கமிஷனரிடம் அ.தி.மு.க., புகார் மனு அளித்துள்ளது. மனுவில், ''முன்னாள் அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
கோவையில் வெடிகுண்டு வெடிக்க சதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விடுபட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
-
ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கு திரும்ப பெற அரசுக்கு அனுமதி
-
அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
-
அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு
-
மதுவில் டர்பன் ஆயில் கலந்து குடித்தவர் சாவு
-
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்புத் துறையினர் மீட்பு
Advertisement
Advertisement