அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

புதுடில்லி:டில்லி வித்யுத் வாரிய ஓய்வு பெற்ற 18,737 ஊழியர்களுக்கு அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் கூறியதாவது:

டில்லி வித்யுத் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 18,737 ஊழியர்களுக்கும், அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

ஏற்கனவே இருந்த 53 சதவீத அகவிலைப்படி இனி 55 சதவீதமாக வழங்கப்படும்.

அரசின் இந்த முடிவு, ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் தேவையான நிதி ஆதரவை வழங்கும். அவர்கள் தங்கள் குடும்பச் செலவுகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement