வாலிபர் மீது போக்சோ

ஈரோடு, சத்தி அருகே ஒட்டக்காரபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ், 23; சத்தியமங்கலத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.


தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், சத்தி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தனர். விசாரணைக்கு பின், சந்தோஷ் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement