மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

மும்பை: மஹாராஷ்டிரா விவசாயிக்கு 4 மின் ஊழியர்கள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 22, 2018 அன்று, நாக்பூரில் வசிக்கும் 68 வயதான விவசாயி, வர்த்தக நோக்கத்திற்காக, தனது பண்ணையில், 5,000 மூங்கில் மரங்கள் நட்டு இருந்தார். அவருடைய வயலின் வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின்மாற்ற இரண்டு கம்பிகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு, தீ பற்றியது. மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாகின.
இந்நிலையில் பாதிப்படைந்த அந்த விவசாயி, தாசில்தார் மற்றும் போலீசில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து மின்சார வாரியம் மின் இணைப்பபை சரிசெய்தது. வனத்துறை விவசாயி நட்ட மரங்களின் சேதத்தை ரூ.10.27 லட்சமாக மதிப்பிட்டது. இந்த மதிப்பீடு மின்வாரிய நிர்வாக பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் விவசாயிக்கு இழப்பீடாக ரூ.4.2 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயி, நாக்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
விவசாயி அளித்த புகாரில், மின் ஊழியர்கள் அலட்சியம் மற்றும் மின் இணைப்புகளை முறையற்ற முறையில் பராமரித்ததால் சேதம் ஏற்பட்டதாக கூறி, வனத்துறையால் மதிப்பிடப்பட்ட இழப்பீட்டைக் கோரினார்.
உடல் மற்றும் மன ரீதியான துயரங்களுக்கு ரூ.2 லட்சமும், புகார் செலவுகளுக்கு ரூ.50,000 மும் கோரியிருந்தார்.
நுகர்வோர் ஆணையம் விசாரணை நடத்தியதில்,
மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பிகளை முறையாக பராமரிக்கத் தவறிவிட்டனர் மற்றும் அலட்சியமாக இருந்தனர், இது சேவையில் குறைபாடு, ஆகவே மின்வாரியத்தின் உயர் பதவியில் உள்ள மூன்று பொறியாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அதன் பிராந்திய இயக்குநர் உள்ளிட்ட 4 பேரும் பயிர் சேதத்திற்கு விவசாயிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,
உத்தரவு தேதியிலிருந்து (மே 15) 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.







மேலும்
-
மக்களாட்சிக்கு வழிவிடுங்க; வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸூக்கு அழுத்தம்
-
உணவு சமைத்து தராத தாய் கொலை: குடிகார மகன் கைது
-
ஹாக்கி: இளம் இந்தியா வெற்றி
-
சட்டவிரோதமாக தங்கிய மியான்மரை சேர்ந்த 3 பெண்கள் உ.பி.,யில் கைது
-
பஞ்சாபில் அகாலிதளம் பிரமுகர் சுட்டுக்கொலை; போதை கடத்தல் கும்பல் அட்டூழியம்
-
2 நாள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி