போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி

கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
இரு நாட்டு ராணுவத்தினரும் உக்கிரமாக போர் புரிந்து வரும் சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் நேரடி பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர பேச்சின் முடிவில், இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் முதல் இரு தரப்பிலும் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இதனால் கைதிகள் பரிமாற்றம் தொடருமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நகரங்கள் முழுவதும் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்த சரமாரியான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். ரஷ்யா ஏவிய 266 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்
-
சென்னைக்கு ஆறுதல் வெற்றி; 10வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது
-
புடின் ஹெலிகாப்டரை குறி வைத்த உக்ரைன் ட்ரோன்: நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்
-
மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
தாஜ்மஹால் பாதுகாப்புக்கு ட்ரோன் எதிர்ப்பு கவசம்!
-
எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை மீறி தேர்தல்: வெனிசுலாவில் வாக்காளர்கள் ஆர்வம்
-
கிரெடிட் ஸ்கோர் மூலம் வங்கிகள் தெரிந்து கொள்ளும் அம்சங்கள்