புதுச்சத்திரம் கோவில் குளம் ரூ.71 லட்சத்தில் சீரமைப்பு

புதுச்சத்திரம்
திருமழிசை அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சொர்ணாம்பிகா சமேத அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பின், 2023ம் ஆண்டு நவ., 19ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது, கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் எவ்வித பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பாசி படர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் உத்தரவின்படி, தற்போது 71 லட்சத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவில் குளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் படிகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இப்பணி நிறைவடைந்த பின், கோவில் குளத்தில் உள்ள குப்பை அகற்றி சீரமைக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement