'தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான் தொழில் நடத்த முடியும்'

சென்னை : பம்மல் காமராஜ்புரத்தை சேர்ந்த பீட்டர் கஸ்பவர் என்பவர், எம் - சாண்ட் ஆலை நடத்தி வருகிறார். தி.மு.க., வார்டு செயலர் அனிஷ்டன் என்பவர், மாமூல் கேட்டு தராததால், தன்னை தாக்கியதாக பீட்டர் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் ஐந்தாவது வார்டு தி.மு.க., வட்ட செயலர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர்.
நான்கு ஆண்டுகளில், 75 லட்சம் ரூபாய் வரை, குவாரி உரிமையாளர்களிடம் இருந்து, தி.மு.க., வட்ட செயலர் வசூலித்திருப்பது தெரிகிறது. தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால் தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்று எழுதப்படாத விதி இருக்கிறது.
விசாரணை வளையத்தில் இருந்து, ஊழல்வாதிகளை காப்பாற்ற, மக்கள் வரிப் பணத்தில், உச்ச நீதிமன்றம் வரை செல்லும், முதல்வர் ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களிடம் இருந்து, மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.
அனைத்து துறைகளிலும், ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, தி.மு.க., குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து, எந்த கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.71,920!
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு