வாகன சோதனையில் சிக்கிய குற்றவாளி
வில்லியனுார்: வில்லியனுார் அருகே போலீசார் வாகன சோதனையில் கொலை குற்றவாளி சிக்கினார்.
புதுச்சேரி, வில்லியனுார் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தால் நேற்று முன்தினம் நள்ளிரவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் பைபாசில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக பல்சர் பைக்கில் (பி.ஓய் 05- எச் 6408) ரத்த கரையுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், புதுச்சேரி, லாஸ்பேட்டை, எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மணி, 23, என்பதும், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அவரது மாமாவை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டிக்கு, இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்தார். எஸ்.பி., உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கொலையாளி மணியை கைது செய்து அழைத்து சென்றார்.
மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.71,920!
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு