காம்பவுண்ட் சுவரை இடித்தவர் கைது

போத்தனூர் : கோவை ஈச்சனாரி அருகே, முத்து நகர் எதிர்பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்வரி, 48. இவருக்கு சொந்தமான இடம் அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரி எதிரே உள்ளது.

இவ்விடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டினார். கடந்த, 10ம் தேதி போத்தனூர் அடுத்த மேட்டூர், அம்மன்புதூர், கிருஷ்ணசாமி நாயுடு வீதியை சேர்ந்த லட்சுமணன், 46 என்பவர் ராஜேஷ்வரி கட்டிய காம்பவுண்ட் சுவரை இடித்து, சேதப்படுத்தினார். இதுகுறித்து ராஜேஷ்வரி தனது கணவருடன் சென்று கேட்டார். தகாத வார்த்தைகளால் இருவரையும் திட்டிய லட்சுமணன், கைகளால் தாக்கி, மிரட்டல் விடுத்துச் சென்றார். சில நாட்களுக்கு பின், ராஜேஷ்வரி தனது உறவினர்கள் சிலருடன் சென்று, பேசியபோது லட்சுமணன், காம்பவுண்ட் சுவரை கட்டித்தருவதாக கூறியுள்ளார்.

நாட்கள் கடந்தும் கட்டித்தராததால், சுந்தராபுரம் போலீசில் ராஜேஷ்வரி புகார் செய்தார். போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.

Advertisement