பொதுத்தேர்வில் அசத்தல் அரசுப்பள்ளிக்கு பாராட்டு

திருப்பூர் : திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளையம் உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு காரணமான ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா நடந்தது. 10ம் வகுப்பு பொது தேர்வில், முதல் மதிப்பெண், 488; இரண்டாவது மதிப்பெண், 483; மூன்றாவது மதிப்பெண், 479 எடுத்துள்ளனர். 15 மாணவர்கள், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 23 மாணவ, மாணவியர், 400 - 450க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பூண்டி நகராட்சி, 10வது வார்டு உறுப்பினர் சுப்ரமணியம், மா.கம்யூ., நிர்வாகிகள் வெங்கடாசலம், அருணாசலம், பாலசுப்ரமணியம், வையாபுரி, ராமசாமி, கார்த்திகேயன் உட்பட முன்னாள் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.

'இந்த தேர்ச்சி விகிதம் ராக்கியாபாளையம் கிராமத்துக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது' என, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர்.

Advertisement