மெல்ல உயர துவங்கியது சோலையாறு நீர்மட்டம்

வால்பாறை, : பருவமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சோலையாறு அணை, மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சின்னக்கல்லாறு, கான்கிரீவ் நீர்வழிப்பாதை, பிர்லா நீர்வழிப்பாதைகளில், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன் கூட்டியே பெய்ய துவங்கியுள்ளது. இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 19ம் தேதி 1.98 அடியாக இருந்தது.
தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 14:42 அடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில், ஏழு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,131 கனஅடி நீர்வரத்து இருந்தது.
பருவமழையால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் பி.ஏ.பி.,பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 4, பரம்பிக்குளம் - 5, வால்பாறை - 4, மேல்நீராறு - 14, கீழ்நீராறு - 7, காடம்பாறை - 5, மேல்ஆழியாறு - 3, சர்க்கார்பதி - 44, துணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 3 என்ற அளவில் மழை பெய்தது.
மேலும்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; பல மாநில முதல்வர்கள் பங்கேற்பு