பராமரிப்பில்லாத ரோடுகள் சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

உடுமலை: கணக்கம்பாளையம் ஊராட்சி எஸ்.வி.,புரம் பகுதியில், பராமரிப்பில்லாத ரோடுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையத்தில், நகரை யொட்டியுள்ளது எஸ்.வி.,புரம் குடியிருப்பு பகுதி. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரையொட்டியுள்ளதால் இங்கு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், கணக்கம்பாளையத்தின் பிரதான பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பல லே-அவுட்களில் முறையான ரோடு வசதி இல்லை. ரோடுகள் குண்டும் குழியுமாகவும், ஏற்கனவே போடப்பட்ட ரோடுகளும் பெயர்ந்த நிலையிலும் உள்ளன.

இதனால், மழை நாட்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு, சிரமப்படுகின்றனர். மேடுபள்ளமாக உள்ள ரோடுகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement