3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பண்ருட்டியில் ஒருவர் கைது

நடுவீரப்பட்டு : பண்ருட்டி வ.உ.சி., நகரில் ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்யபடுவதாக வட்ட வழங்கல் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் தலைமையில், நேற்று முன்தினம் குற்ற நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் ஞானமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் வ.உ.சி., நகர் ஆனந்தன்,36; என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், புதுச்சேரி ஓட்டல் கடைக்கு விற்பனைக்காக 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தனை கைது செய்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement