தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் அலறல்

வால்பாறை : வால்பாறையில், சமீப காலமாக தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ரோட்டில் நடமாடும் நாய்கள் சில நேரங்களில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டுகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

முதியவர்கள், குழந்தைகள், தெருநாய்களை கண்டு அலறியடித்து ஒடும் நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை கக்கன்காலனி, அண்ணாநகர், சிறுவர்பூங்கா, காமராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன.

அவற்றின் நடமாட்டத்தால் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருகிறது.

இதனால், உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணியருக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.-

Advertisement