இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நகர தலைவர் அன்வர் அலி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ஜெகரிய்யா முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மகபூப் ஹுசைன் வரவேற்றார். மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, மண்டல துணை ஒருங்கிணைப்பாளர்கள் சல்மான் பாரிஸ், அபூபக்கர் ஆகியோர் பேசினர்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் சட்டசபை தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கேட்டுப்பெற மாநில தலைமையை வலியுறுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் அஹமது, மாவட்ட தலைவர் முஹம்மது முஸ்தபா, செயலாளர் நூருல் அமீன் ரப்பானி, நகர துணைத் தலைவர் அப்துல் ரியாஜ், அமைப்பு செயலாளர் அப்துஸ் சலாம் நாஸிர், அஜீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement