பாலத்தில் மண் அரிப்பை தடுக்க கற்கள் பதிக்கும் பணி

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கெடிலம் ஆற்றின் பாலத்தின் அடியில் மண் அரிப்பை தடுக்க கருங்கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கெடிலம் ஆற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

மழை காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீர் பாலத்தின் மீது வழிந்தோடியது.

இதனால் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதற்கு பதிலாக பழைய பாலத்தின் அருகில் கடந்த ஆண்டு 19 கோடி ரூபாய் மதிப்பில் நபார்டு திட்டத்தில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது.

வரும் காலத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், பழைய பாலம் மேலும் வலுவிழக்காமல் தடுக்கவும் தற்போது பழையபாலத்தின் அடியில் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement