இளைஞர்கள் 134 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: சீமான்

16


சென்னை: ''சட்டசபை தேர்தலில் ஆகச் சிறந்த ஆளுமைகள் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அதில் 134 பேர் இளைஞர்களாகத் தான் இருப்பார்கள்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள். ஆகச் சிறந்த ஆளுமைகள் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அதில் 134 பேர் இளைஞர்களாகத் தான் இருப்பார்கள். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தமிழ்த் தேசியவாதிகளுக்கான களம்.



முந்தைய நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் இந்த முறை பங்கேற்றது ஏன்? என்று எல்லோருக்கும் கேள்வி எழுகிறது. இந்த முறை கூட்டத்தில் பங்கேற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து இருக்க வேண்டும்.


அமலாக்கத்துறை சோதனைக்காக போகிறீர்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு வேளை சந்திரபாபு அல்லது நிதீஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி விட்டால், தி.மு.க., 22 உறுப்பினர்களுடன் ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இணக்கமாக இருக்கும்.


ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதலில் பேரணி நடத்தியவர் முதல்வர் ஸ்டாலின். பா.ஜ., கூட்டணி முதல்வர்கள் கூட பேரணி நடத்தவில்லை. அரசியல் லாபத்திற்காக, தி.மு.க., உடன் இணக்கமாக இருக்க பா.ஜ., விரும்புகிறது.



சவுக்கு சங்கர் குரல் வளையை நெரிக்க வேண்டும். அவரை பேச விடாமல் தடுத்து விட வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த அடக்கு முறைகள் எல்லாம் சவுக்கு சங்கருக்கு என்று அமைதியாக இருந்தால் நாளை அது உங்களுக்கு நடக்கும். ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல கூடாது என்று சொல்வது ஏற்புடையது அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement