பல கோடி ரூபாய் நிதி மோசடி; இந்தியரை நாடு கடத்தியது அமெரிக்கா!

2

புதுடில்லி: பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்த இந்தியரான சந்தோக் என்பவரை அமெரிக்கா நாடு கடத்தியது.


அமெரிக்காவில் மூத்த குடிமக்களை குறி வைத்து, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தியரான சந்தோக் என்பவர் நீதி மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. சந்தோக் பல போலி நிறுவனங்களை உருவாக்கி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.



மோசடியை நடத்தியதற்காக சந்தோக் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவில் இருந்து சந்தோக்கை நாடு கடத்த சி.பி.ஐ., நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டது.


இவன் இந்தியாவில் பல கோடி நிதி மோசடி செய்து விட்டு அமெரிக்காவிற்கு தப்பி ஓடினான். இதனால் தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தும் படி அமெரிக்காவிடம் இந்திய அரசு தரப்பில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது.


தற்போது, இந்தியரான சந்தோக் என்பவரை அமெரிக்கா நாடு கடத்தியது. அவர் இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அங்கு அவரை காவலில் எடுக்க சி.பி.ஐ., கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர், சந்தோக் செய்த மோசடி குறித்து முழு விபரம் வெளியாகும்.

Advertisement