விபத்தை கட்டுப்படுத்த சிக்னல் வாகன ஓட்டிகள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் நான்குமுனை சந்திப்பில் விபத்துகளை கட்டுப்படுத்த சிக்னல் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் பஸ் நிறுத்தம் அருகே சென்னை-கும்பகோணம் சாலை, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் செல்லும் நான்கு முனை சந்திப்பு உள்ளது.

இங்கு, விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து சிக்னலோ, ரவுண்டானாவோ இல்லை. இதனால் மின்னல் வேகத்தில் செல்கிறது.

குறிப்பாக, சேத்தியாத்தோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், நான்கு முனை சந்திப்பை கடக்கும் போது, கும்பகோணம், சென்னை செல்லும் வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகிறது.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement