வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு: பிரதமர் மோடி பேச்சு

2

புதுடில்லி: ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என நிடி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.


டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து குழுவாக செயல்பட்டால் சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும் போது, தேசமும் வளர்ச்சி அடைந்ததாக மாறும்.


வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு, அதை நோக்கியே நாம் முன்னேற வேண்டும். இது தான் 140 கோடி பேரின் விருப்பம். ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது ஒரு சுற்றுலா தலத்தையாவது உருவாக்க வேண்டும். இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் நகரங்களை நோக்கி நாம் பாடுபட வேண்டும்.


பெண்களை பணியாளர்களை மரியாதையுடன் ஒருங்கிணைக்கப்படும் வகையில் சட்டங்கள், கொள்கைகளை உருவாக்க வேண்டும். சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் நாம் பாடுபட வேண்டும். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒரு குழுவாக செயல்ட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement