தாயகத்துக்கு அனுப்பும் பணம் வரியை குறைத்தது அமெரிக்கா

வாஷிங்டன்:அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு விதிக்கப்பட இருந்த 5 சதவீத வரி, 3.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, 2026 ஜன.1ல் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் வெளிநாட்டவர், தாயகத்துக்கு அனுப்பும் பணத்திற்கு, 5 சதவீதம் வரை வரி விதிக்கப்படுமென அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதற்கான மசோதா, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் 5 சதவீதமாக முன்மொழியப்பட்ட வரி, சபையில் தாக்கல் செய்வதற்கு முன்னதாக 3.50 சதவீதமாக குறைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த குறைப்பு ஒரு வகையில் நிம்மதியை அளித்தாலும், இதுவும் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 2023 - 24ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் அமெரிக்கா, 27.70 சதவீதம் என்ற மிகப்பெரிய பங்களிப்பை கொண்டிருந்தது.

Advertisement