ஸ்ரீவி., திருவண்ணாமலையில் குரங்குகளை பிடிக்க கூண்டு

ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் பக்தர்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்த சில குரங்குகள் கடந்து சில மாதங்களாக அடிவாரம் முதல் கோயில் வரை பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து வருகிறது. அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் தேங்காய், பழம், அர்ச்சனை தட்டையும் பறித்து செல்கிறது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர் என நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனையடுத்து மலையடிவாரத்தில் வனத்துறை சார்பில் குரங்குகளை பிடிக்க ஒரு கூண்டை நேற்று காலை வனத்துறை ஊழியர்கள் வைத்தனர். இதன் மூலம் சில நாட்களில் குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்படும் என தெரிவித்தனர்.

Advertisement