மூதாட்டியிடம் நகை திருட்டு

ராஜபாளையம் : ராஜபாளையம் பெரிய கடை பஜார் தெருவே சேர்ந்தவர் தங்கமாரி 65, சந்தையில் காய்கறி வாங்கி முடங்கியார் ரோடு எம்.ஜி.ஆர்., சிலை பின்புறம் நடந்து வந்தார்.

டூவீலரில் நின்று கொண்டிருந்த இருவர் இப்பகுதியில் திருட்டு பயம் அதிகமாக உள்ளது நகைகளை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் தான் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பையில் சுருட்டி வைத்து வீட்டில் சென்று பார்த்த போது நகைகளை காணவில்லை. இது குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement