தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் உடைந்த தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் தேங்க வழியின்றி, வீணாக வெளியேறி வருகிறது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த சின்ன பகண்டை கிராமம், பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ளது. ஆற்றின் வடக்கு கரையில் விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் உள்ளது.
இவ்விரு பகுதிகளையும் சுற்றியுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம்-புதுச்சேரி அரசுகள் ஒப்பந்தம் ஏற்படுத்தி, கடந்த 1972ல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டின.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது இந்த ஆற்றில் தண்ணீர் வரும். அப்போது, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 8 ஏரிகளுக்கும், புதுச்சேரியின் பாகூர் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும், தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீரால் சுற்றுப்புற பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தடுப்பணையின் நடு பகுதி 200 அடி நீளத்துக்கு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆற்றில் வந்த தண்ணீர் தேங்க வழியின்றி, முழுதுமாக வெளியேறியது. தடுப்பணையில் உடைந்த பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை. அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால், தற்போது ஆற்றில் வரும் தண்ணீர் உடைந்த பகுதி வழியாக வீணாக வெளியேறுகிறது. எனவே, பருவ மழைக்கு முன், உடைந்த தடுப்பணையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!