முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் ரயில்வே யார்டு சீரமைப்பு பணி காரணமாக ரயில்கள் தாமதமாகச் சென்றன.

விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் ரயில் நிலைய யார்டு சீரமைப்பு செய்யும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை 7.50 மணி முதல் காலை 9:50 மணி வரையும், மதியம் 12:50 மணி முதல் 2.50 மணி வரை தலா 2 மணி நேரம் பராமரிப்பு பணி நடந்தது.

இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மற்றும் மறுதிசையில் சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டன.

பராமரிப்புக்கு காரணமாக காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் என மொத்தம் நான்கு மணி நேரம் ரயில்கள் தாமதமாக சென்றன. ரயில்களை ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்திவைத்து, பின்பு இயக்கப்பட்ன.

Advertisement