உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்

9


புதுடில்லி: ''ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது'' என நிடி ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.


இது குறித்து நிடி ஆயோக் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

நச் பதில்




அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ ஐபோன்களை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து கேட்டபோது,


​​''வரி விதிப்பில் மாற்றம் வரலாம். அது குறித்து ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தியாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்'' என சுப்பிரமணியம் பதில் அளித்தார்.

Advertisement