பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடில்லி: ''பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. ஒவ்வொரு இந்தியரின் லட்சியமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
122வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டும் அல்ல. மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போது, நமது பாதுகாப்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது.
பயங்கரவாதம்
உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஒரு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. இன்று ஒவ்வொரு இந்தியரின் லட்சியமும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். எல்லையைத் தாண்டி பயங்கரவாத முகாம்களை நமது படைகள் துல்லியமாக அழித்தன.
வனவிலங்கு பாதுகாப்பு
கடந்த 5 ஆண்டுகளில், கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 674 லிருந்து 891 ஆக அதிகரித்துள்ளது. இது ஊக்கமளிக்கிறது. விலங்கு கணக்கெடுப்பு பணி சவாலானது. இது 35,000 சதுர கி.மீ. பரப்பளவில் செய்யப்பட்டது, ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஊக்கமளிக்கிறது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
65 வயதான ஜீவன் ஜோஷி பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் போலியோவால் பாதிக்கப்பட்டார், தொடர்ந்து போராடினார். அவர் தனது வாழ்க்கையை கலைகளுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரது பணி கலைகளுக்கு மட்டுமல்ல, பக்திக்கும் உரியது. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதற்கு எடுத்துரைத்தார்.
பறக்குது கல்வியின் கொடி!
ஒரு காலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. தற்போது மத்திய அரசின் நடவடிக்கையால் நிலைமை மாறி உள்ளது. நக்சல்கள் கொடி பறந்த இடத்தில் தற்போது கல்வியின் கொடி உயர பறக்கிறது.
மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் 95 சதவீத தேர்ச்சி உடன் தண்டேவாடா மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 12ம் வகுப்புத் தேர்வில், இந்த மாவட்டம் மாநிலத்தில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய மாற்றங்கள் நம் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



மேலும்
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
வெற்றியுடன் தொடரை முடிக்குமா சென்னை? கடைசி போட்டியில் பேட்டிங் தேர்வு
-
மூங்கில் மரங்கள் நாசம்; விவசாயிக்கு மின் ஊழியர்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!