மாதா கோவில் தேர்பவனி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி துாய இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் 152ம் ஆண்டு பெருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.

விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி மாலை ஆலயத்தில் பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் கொடியேற்றியதைத் தொடர்ந்து திருப்பலி நடந்தது.

பின், நடந்த நவநாள் திருப்பலியில் பங்குதந்தைகள் மரிய ஆனந்தராஜ், மெசியா, இன்பராஜ் திருப்பலி நடத்தினர்.

நிறைவு நாளான நேற்று முன்தினம் திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான் போஸ்கோ பெருவிழா திருப்பலி நடத்தினார். பின், மாலை சகாய அன்னை சிறப்பு மலர் அலங்காரத்துடன் தேர்பவனி நடந்தது.

இரவு 10:00 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதத்துடன் பங்குதந்தை மார்டின் அந்தோணி கொடியிறக்கம் செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement