வல்லக்கோட்டையில் வடிகால்வாயில் அடைப்பு சாலையில் வழியும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சியில், பெரும்பாலாான தெருக்களில் மழைநீர் மற்றும் வீடு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இருந்தும், ஊராட்சி நிர்வாகம் இதை முறையாக பராமரிக்காததால், வடிகால்வாய் துார்ந்து அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வடிந்து வருகிறது.
இதனால், அப்பகுதி கடும் துர்நாற்றம் வீசுவேதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர். மேலும், மழை காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் அதிகரித்து உள்ளது.
எனவே, பருவ மழைக்குள்ளாக, வல்லக்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து வடிகால்வாய்களையும் துார்வாரி சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement