குருவிமலை பாலாற்றில் குப்பை நிலத்தடிநீர் மாசடையும் அபாயம்

குருவிமலை:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, பாலாற்றாங்கரையையொட்டி குருவிமலை கிராமம் உள்ளது. அப்பகுதியினர் பாலாற்றங்கரையை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவால், பாலாற்றங்கரையோர நிலமும், நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.

பிளாஸ்டிக் கழிவு கலந்த குடிநீரை பயன்படுத்தும்போது, மனிதர்களுக்கு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. பிளாஸ்டிக் கழிவை உண்ணும் நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, குருவிமலை பாலாற்றில் குப்பை கொட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement