போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட மூவர் கைது

தண்டையார்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பு அருகே போதைக்காக, உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, போதைக்காக, உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்ற, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்த கவுதம், 18, அவரது அண்ணன் கிஷோர், 20 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்த, 25 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement