ஏமாற்றிய நண்பர் மீது நடிகை புகார்

சென்னை:சென்னையை சேர்ந்த நடிகையும், மாடலிங் துறையிலும் ஈடுபடும் 30 வயது பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதன் விபரம்:

என் கல்லுாரி நண்பரான அலெக்ஸ்பாண்டியன் ஜவஹர், 34, திருமணமாகி, கனடாவில் வசிக்கிறார். அவர், கொடுமைபடுத்தும் மனைவியை விவாகரத்து செய்து, என்னை திருமணம் செய்வதாக கூறிவந்தார்.

இதனால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்தேன். சென்னை வந்த அவருடன், கடந்தாண்டு டிச., 6ல், சோழிங்கநல்லுாரில் உள்ள விடுதியில் அறை எடுத்து, ஒன்றாக தங்கினேன்.

பின், அவர் கனடா சென்றதும் என்னை கண்டுகொள்ளவில்லை; மனைவியை விவகாரத்தும் செய்யவில்லை. அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்; என் மொபைல் அழைப்பையும் நிராகரித்து விட்டார்.

அவரது ஒரு நாள் ஆசைக்காக, எட்டு ஆண்டுகளாக என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, முதற்கட்டமாக அலெக்ஸின் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement