அங்கன்வாடி மைய வளாகத்தில் கால்நடை மருந்தகத்தால் அச்சம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜனகராஜகுப்பம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகளுக்காக தியாகாபுரம் சாலையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் எதிரே, கால்நடை மருந்தகமும் செயல்பட்டு வருகிறது. கால்நடை மருந்தகமும், அங்கன்வாடி மையமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

கால்நடை மருந்தகத்திற்கு வரும் ஆடு, மாடுகள் காத்திருக்கும் போது, அதே வளாகத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, அங்கன்வாடி மைய குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement