வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறி 2 பக்தர் பலி

கோவை,: புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த முத்துக்குமரன் மனைவி கவுசல்யா, 45. சிவபக்தரான இவர், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, தன் நண்பரான முருகபூபதி என்பவருடன் வெள்ளியங்கிரி மலையேறியுள்ளார்.

மாலை, 4:00 மணிக்கு, ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்து, சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, இரவில் கீழே இறங்க துவங்கினர். ஏழாவது மலையில் இறங்கிய போது, கவுசல்யாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருவண்ணாமலையை சேர்ந்த செல்வகுமார், 23, நேற்று முன்தினம் இரவு மலையேறி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கிக் கொண்டிருந்தார். ஐந்தாவது மலையில் இறங்கிய போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வனத்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement